தமிழக வெற்றிக்கழக தலைவரும் நடிகருமான விஜய் நடிப்பில் உருவான ஜனநாயகன் திரைப்படம் நாளை (09.01.26) வெளியிடப்படப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சென்சார் சான்றிதழ் பிரச்சனை காரணமாக நாளை ஜனநாயகன் திரைப்படம் வெளியீடு இல்லை என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்து இருந்தது. இது விஜய் ரசிகர்கள் மற்றும் த.வெ.க கட்சியினர் இடையே பெரும் ஏமாற்றத்தை தந்தது. இதற்காக 69 பொங்கல் பானையில் பெண்கள் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.