திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி உத்தரவின் பேரில் சார்பு ஆய்வாளர் சரத்குமார் மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது காமராஜர் சிலை அருகே அரசு அனுமதியின்றி சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்த திண்டுக்கல், காளிமுத்துபிள்ளை சந்து பகுதியை சேர்ந்த கோவிந்தன் மகன் சரவணன்(49) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 26 மதுபான புட்டிகளை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.