சாத்தான்குளம்: சடைனேரி வாய்க்காலை தூர்வார விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள்
வல்லநாடு அருகே உள்ள மருதூர் அணைக்கட்டு பகுதியில் இருந்து சடையனேரி வாய்க்காலுக்கு வரும் தண்ணீர் செல்லும் ஓடையானது மிகவும் மேடாக உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சாத்தான்குளம் மற்றும் அதன் தெற்கு பகுதிக்கு வரும் தண்ணீர் மிகவும் குறைவாக வருகிறது என சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். தொடர்ந்து அந்த வாய்க்காலை தூர் வர வேண்டுமென அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.