திண்டுக்கல் பிஎஸ்என்ஏ பொறியியல் கல்லூரியில் குழந்தைகள் அறிவியல் மாநாடு நாளை மற்றும் நாளை மறுதினம் நடைபெற உள்ளது. என தமிழ்நாடு அறிவியல் இயக்க பொதுச்செயலாளர் முகமது பாதுஷா, கல்லூரி முதன்மை சேர்மன் ரகுராம் கூட்டாக தெரிவித்தனர். தமிழ்நாடு அறிவியல் இயக்கம், சென்னை கணித அறிவியல் மையம், அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு, பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரி சார்பில் 34வது குழந்தைகள் அறிவியல் மாநில மாநாடு பி.எஸ்.என்.ஏ.,பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.