தூத்துக்குடி மாவட்டம் வானரமுட்டி பகுதியில் இருந்து மாடுகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்தது அப்பொழுது மெய் தலைவன் பட்டி நான்கு வழி சாலையில் வரும் பொழுது லாரியின் பின்னால் அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது இதில் லாரியில் பயணம் செய்த திலகராஜ் ராமர் சேகர் உள்ளிட்ட நான்கு பேர் காயமடைந்தனர் உடனடியாக அவர்களை விட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.