வேடசந்தூர்: பாரதிநகரில் பார்வையற்றோர் ஊனமுற்றோருக்கு தீபாவளி பரிசு
வேடசந்தூர் பாரதி நகரில் பார்வையற்றோர் மற்றும் ஊனமுற்றோர் மறுவாழ்வு சங்க அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் 100-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். சங்கத்தின் சார்பில் உறுப்பினர்கள் அனைவருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகள் வழங்கப்பட்டது. சங்க தலைவர் காளியப்பன் தலைமை வகித்து அனைவருக்கும் புத்தாண்டுகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற தனி வட்டாட்சியர் சிவசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். அய்யலூரைச் சேர்ந்த மோகன்ராஜ் மோனிஷா தம்பதியினர் சங்கத்தினர் அனைவருக்கும் பிரியாணி வழங்கினர்.