வேடசந்தூர்: அரசு ஆஸ்பத்திரியில் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்த சமையல் மாஸ்டருக்கு இழப்பீடு கேட்டு உடலை வாங்க மறுத்து போராட்டம்
வேடசந்தூர் அருகே உள்ள ஜி நடுப்பட்டியில் வசித்து வருபவர் குஞ்சையா. இவர் திண்டுக்கல்லில் உள்ள ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து வருகிறார். பணியை முடித்து விட்டு வரும்பொழுது வளைவில் திரும்பிய பொழுது தடுமாறி சாலையோர பள்ளத்தில் இருந்த குடிநீர் வடிகால் வாரிய கேட் வால்வு தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்தார். மூடப்படாத குடிநீர் தொட்டியால் தான் அவர் உயிரிழந்தார் அதனால் குடிநீர் வடிகால் வாரியம் இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கூறி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்.