பேரூர்: வடவள்ளி பகுதியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் பார்வையிட்டார்
கோயம்புத்தூர் மாநகராட்சி வார்டு எண் 40, வடவள்ளி பகுதியில் உள்ள மருதமலை அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோயில் மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை 10 மணி அளவில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் .பவன்குமார் , கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி. ப.ராஜ்குமார் ஆகியோர் பார்வையிட்டனர்.