வாலாஜா: வாலாஜாபேட்டை BDO அலுவலகத்தில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அமைச்சர் ஆர்.காந்தி ஊர்வலமாக சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார்
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பேருந்து நிலையம் முதல் வாலாஜாபேட்டை BDO அலுவலகம் வரை பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தலைமையிலான திமுகவினர் ஊர்வலமாக சென்று பேரறிஞர் அண்ணாவின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது இந்த நிகழ்வில் திமுக முன்னணி பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்