திருவெறும்பூர்: திருவெறும்பூர் அருகே பாதாள சாக்கடைக்குள் இறங்கிய இரண்டு தொழிலாளர்கள் விசவாயு தாக்கி உயிரிழப்பு
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள கார்மல் கார்டன் பகுதியில் பாதாள சாக்கடையானது அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாதாள சாக்கடையில் உள்ள அடைப்பை சரி செய்வதற்காக ஒப்பந்த தொழிலாளர்களான சின்ன சேலத்தைச் சேர்ந்த பிரபு மற்றும் புதுக்கோட்டை திருவப்பூரை சேர்ந்த ரவி ஆகியோர் உள்ளே இறங்கிய போது விஷ வாயு தாக்கி உயிரிழந்தனர்