திருவாடனை: ஸ்ரீ மழை முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பால்குட வீதி உலா வந்த பக்தர்கள்
திருவாடானை கிழக்கு தெருவில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ மழை முத்துமாரியம்மன் கோவில் திருவிழா கடந்த செப் - 9ம் தேதி செவ்வாய்க்கிழமை காப்புக் கட்டுதலுடன் துவங்கி நடைபெற்று வருகிறது. இன்று பக்தர்கள் விரதம் இருந்து திருவாடானை பெரிய கோவில் முன்பாக உள்ள ஆறாம் மண்டகப்படி மண்டபத்தில் இருந்து பால்குடம் ஏந்தி வீதி உலா வந்தனர்.