பொன்னேரி: காரணி கிராமத்தில் ஆரணியாற்றின் தரைப்பாலம் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதால் மக்கள் அவதி
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த காரணி கிராமத்தில் ஆரணியாற்றின் தரைப்பாலம் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதால் மக்கள் அவதி ஆற்றில் தண்ணீரின் வேகத்தால் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டு முற்றிலுமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. 18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை