திருப்பத்தூர்: மாவட்டத்தில் உள்ள 1364 கிளைகளுக்கும் ரெட்டைமலை சீனிவாசனின் புகழை கொண்டு செல்வது தலையாய கடமை அவரது குருபூஜை விழாவில் பாஜகவினர் சூளுரை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில், காந்தி சிலை அருகே, இரட்டைமலை சீனிவாசனின் நினைவு தினத்தில் பாஜக சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பட்டியலணி மாவட்ட பொதுச் செயலாளர் ரவிச்சந்திரன் ஏற்பாட்டில்,மாவட்ட தலைவர் பாண்டித்துரை மலர் தூவினார்.அவர், இரட்டைமலை சீனிவாசனின் குருபூஜையை தமிழ்நாடு முழுவதும் கொண்டாட வேண்டும் என்று கூறினார்.அம்பேத்கருடன் இணைந்து அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர் சீனிவாசன். அவரது புகழை திமுக வெளிப்படுத்தவில்லை.சமூக நீதிக்காக போராடும் ஒரே கட்சி பாஜக என பேசினார்