மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள மணப்பச்சேரியை சேர்ந்தவர் முருகன் (வயது 55). இவரது மனைவி அழகுமீனாள் (50). இவர் தனது மகன் சரவண பாண்டியுடன் (24) பைக்கில் நத்தம் அருகே பண்ணுவார்பட்டி கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்தார். பின்னர் வீடு திரும்பிய போது பூதக்குடி அருகே நடந்த விபத்தில் தாய் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். மகன் மருத்துவமனையில் சிகிச்சை பலன் இல்லாமல் உயிரிழந்தார்.