ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள காசிபுக்கா ஸ்ரீ வெங்கடேஸ்வரர் பெருமாள் கோவிலில் ஏகாதசி பண்டிகையை முன்னிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாகக் காணப்பட்டது. அளவுக்கு அதிகமான பக்தர்கள் ஒரே நேரத்தில் கூடியதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 பெண்கள் மற்றும் 12 வயது சிறுவன் உட்பட மொத்தம் 9 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 13 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.