கோவை தெற்கு: செட்டிபாளையம் பகுதியில் 25 கிலோ கஞ்சா பறிமுதல் ஆந்திராவைச் சேர்ந்த இருவர் கைது மாவட்ட காவல் துறையினர் நடவடிக்கை
செட்டிபாளையம் காவல் நிலைய காவல் துறையினருக்கு கஞ்சா விற்பனைக்கு வைத்து இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல் துறையினர், மலுமிச்சம்பட்டி அருகில் சென்று சோதனை மேற்கொண்ட போது சட்டத்திற்கு விரோதமாக 5 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வைத்து இருந்த ஆந்திர பிரதேஷ் மாநிலத்தைச் சேர்ந்த கண்டால ராம லட்சுமணன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.