திருப்போரூர்: அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 95 லட்சம் மதிப்பீட்டில் 4 வகுப்பறைகள் கொண்ட கட்டிடத்தை குத்துவிளக்கேற்றி மாணவர்கள் பயன்பாட்டிற்கு வழங்கிய ஆட்சியர்
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் ரூபாய் 95 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டி முடிக்கப்பட்ட நான்கு வகுப்பறைகள் கொண்ட பெண்கள் மேல்நிலை ப்பள்ளியில் கூடுதல் பள்ளி கட்டிடத்தை இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்,