விளாத்திகுளம்: விருசம் பட்டி கிராமத்தில் கிராம சபை கூட்டம் எம்எல்ஏ பங்கேற்பு
விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குளத்தூர் அருகே உள்ள விருசம்பட்டியில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் கலந்து கொண்டு கிராமத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். மேலும், பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். கூட்டத்தில் விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் ரஞ்சித் தங்கவேல் மற்றும் வட்டாட்சியர் கண்ணன் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.