திருத்தணி: முருகன் கோயிலில் திருக்கல்யாணம் விழா திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்
முருகனின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக போற்றப்படும் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கடந்த 22ஆம் தேதி முதல் ஒரு வாரமாக கந்தசஷ்டி விழா வெகு விமர்சையாக நடைபெற்று வந்தது.விழாவில் இறுதி நாளான இன்று காலை வள்ளி தெய்வானை சமேத கல்யாண உற்சவருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. அப்போது திரளாக கூடியிருந்த பக்தர்கள் அரோகர முழக்கத்துடன் சுவாமி திரிசனம் செய்து வழிபட்டனர்,