வாலாஜா: வாலாஜாபேட்டையில் தேர்தல் ஆணையம் அறிவிப்பை ஒட்டி பாமகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பேருந்து நிலையம் அருகே பாட்டாளி மக்கள் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக இன்னும் ஓராண்டு நீடிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்ததை ஒட்டி அதனை வரவேற்கும் விதமாக மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான இளவழகன் தலைமையில் அக்கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டனர்