வடமதுரை அருகே உள்ள வெள்ளபொம்மன்பட்டியை சேர்ந்தவர் செல்வக்குமார். இவர் சீலப்பாடியான்களம் பகுதியில் தென்னை நாரிலிருந்து கயிறு தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். நிறுவனம் இயங்கிக் கொண்டிருந்த போது திடீரென மின்கசிவு ஏற்பட்டு தென்னை நார்களில் தீப்பற்றியது. அப்போது தென்னை நார்கள் உற்பத்தி செய்து வைத்திருந்த கயிறுகள் மற்றும் எந்திரங்கள் தீ பற்றி மளமளவென எரியத் தொடங்கியது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பணியில் இருந்தவர்கள் டிராக்டரில் இருந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முயன்றனர்.