திண்டுக்கல் கிழக்கு: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறை சங்கத்தின் கூட்டமைப்பு சார்பில் காத்திருப்பு போராட்டம்
திண்டுக்கல் வருவாய் துறை சங்கத்தின் கூட்டமைப்பு சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை காத்திருப்பு போராட்டம் நேற்று நடைபெற்றது. போராட்டத்திற்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஜான் பாஸ்டின், மகேஸ்வரன், விக்னேஷ், குழந்தை தலைமை வகித்தனர். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முபாரக் அலி வாழ்த்துரை வழங்கினார். வருவாய்த்துறை ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சுகந்தி சிறப்புரை ஆற்றினார்.