நத்தம்: செந்துறையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் உணவு பாதுகாப்புதுறை அதிரடி
நத்தம் அருகே செந்துறையில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலை அடுத்து உணவு பாதுகாப்பு அலுவலர்கள், திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது செந்துறை பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற ரமேஷ், வடிவேல், ஆகியோர் கடைகளில் 1.200 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு தலா ரூபாய். 25000/- அபராதம் விதித்து கடைகளை மூட உத்தரவிட்டனர்