சோழிங்கநல்லூர்: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஸ்ரீ ராதாகிருஷ்ணன் கோவிலில் டிஜிபி சங்கர் ஜீவால் மற்றும் பாமக தலைவர் அன்புமணி மனைவி சௌமியா சாமி தரிசனம்
சென்னை கிழக்கு கடற்கரை சாலை அக்கரை பகுதியில் உள்ள ஸ்ரீ ராதாகிருஷ்ணன் கோவிலில் கிருஷ்ணன் ஜென்மாஷ்டமி விழா சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கிருஷ்ணரை வழிபட்டு வருகின்றனர். இஸ்கான் கோவிலில் கிருஷ்ணர் ராதை சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர். தமிழக காவல்துறை தலைவர் சங்கர்ஜிவால் மற்றும் பாமக தலைவர் அன்புமணி மனைவி சௌமியா ஆகியோர் வழிபாடு செய்தனர்