சின்ன சேலம்: அம்மையகரம் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மனு அளித்தவுடன் தற்காலிக பட்டா மின் இணைப்பிற்கான ஆணைகள் வழங்கல்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள அம்மையகரம் பகுதியில் உள்ள தனியார் மஹாலில் இன்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் சின்னசேலம் ஒன்றிய குழு பெருந்தலைவர் சத்தியமூர்த்தி கலந்து கொண்டார். இதில் அம்மையகரம், எலவடி, மூங்கில்பாடி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை அளித்தனர்