திண்டுக்கல் கிழக்கு: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு மது போதையில் நடுரோட்டில் ரகளை - இளைஞரால் போக்குவரத்து பாதிப்பு
திண்டுக்கல் தாடிக்கொம்பு பகுதியைச் சேர்ந்த மோகன் மூர்த்தி என்ற இளைஞர் மது போதையில் நடுரோட்டில் அமர்ந்து ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திண்டுக்கல் அரசு மருத்துவமனை அருகே நடந்த இச்சம்பவத்தில், ரத்தக் காயங்களுடன் இருந்த மோகன் மூர்த்தி, தனது வாகனத்தை காணவில்லை எனக் கூச்சலிட்டபடி, போன் பேசிக் கொண்டு சாலையில் அமர்ந்தார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.