கொடைக்கானல்: கொடைக்கானல் பழனி பிரதான சாலையின் ஓரத்தில் புதர் மண்டி காணப்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் மற்றும் விபத்துக்கள் ஏற்படும் அபாயம்
கொடைக்கானலுக்கு செல்லும் பழனி பிரதான மலைச்சாலை முழுவதுமாக சாலை ஓரங்களில் சாலையை மறைக்கும் வகையில் புதர் மண்டி கிடப்பதால் எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை என வாகன ஓட்டிகள் இடையே குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. மேலும் பழனி சாலை குறுகலான சாலையாகவும் ஆபத்து நிறைந்த வளைவுகள் அதிகம் நிறைந்து காணப்படுகிறது.