திண்டுக்கல் மாவட்டம் பழனியில் வனத்துறையின் சார்பில் மனித -யானை மோதலை தடுக்கும் விதமாக கொடைக்கானல் வனச்சராக பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அதனை கண்காணித்து கட்டுப்படுத்தும் மனித -யானை மோதல் கட்டளை மையம் அமைந்துள்ளது. இன்று இந்த மையத்தை தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலர் , சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் தலைவராக உள்ள சுப்ரியா சாகு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.