வேடசந்தூர்: ஆத்துமேட்டில் விலகியைசென்ற கட்சியினர் மீண்டும் தேமுதிகவில் இணைந்தனர்
திண்டுக்கல் மேற்கு மாவட்ட தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வேடசந்தூர் ஆத்துமேடு கரூர் ரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தேமுதிக திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் சிவகுமார் தலைமை வகித்தார். இதில் தேமுதிகவில் இருந்து விலகி வேறு கட்சிக்கு சென்ற முன்னாள் மேற்கு மாவட்ட பொருளாளர் பெருமாள், முன்னாள் வேடசந்தூர் பேரூர் செயலாளர் ஜெயபாக்யா சந்திரசேகர், முன்னாள் வடமதுரை பேரூர் செயலாளர் செல்வம், வேடசந்தூர் முன்னாள் ஒன்றிய இளைஞரணி செயலாளர் செல்வராஜ், உட்பட ஏராளமானோர் கட்சியில் இணைந்தனர்.