திருக்கோயிலூர்: திருக்கோவிலூரில் போக்குவரத்து விதிகளை மீறிய நபரிடம் லஞ்சம் பெற்ற போக்குவரத்து காவலரை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி அதிரடி உத்தரவு
திருக்கோவிலூரில் போக்குவரத்து காவலர் ரமேஷ் இவர் சில நாட்களுக்கு முன்பு திருக்கோவிலூர் பேருந்து நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது வாகன ஓட்டி ஒருவரிடம் விதிகளை மீறியதாக கூறி ₹200 லஞ்சம் பெற்றுள்ளார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் லஞ்சம் வாங்கிய போக்குவரத்து காவலர் ரமேஷைசஸ்பெண்ட் செய்து எஸ்.பி உத்தரவிட்டுள்ளார்