கல்வராயன் மலை: புதுப்பாலப்பட்டு கிராமத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற மாபெரும் திண்ணை பிரச்சாரம் மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கும் விழா
புதுப்பாலப்பட்டு கிராமத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட அம்மா பேரவை சார்பில் இன்று அதிமுக அரசின் சாதனைகளை விளக்கி துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு மற்றும் முன்னாள் அமைச்சர் மோகன் ஆகியோர் இணைந்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.