திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். அந்த வகையில் இன்று இரவு ரயில் நிலையத்திற்கு வந்த அரசு பேருந்து பழுதாகி நின்றதால் பயணிகள் மிகவும் அவதிக்கு உள்ளாகினர். நீண்ட நேரம் ஆகியும் பேருந்தை இயக்க முடியாததால் பயணிகள் மற்றும் அங்கு இருந்த பொதுமக்கள் பேருந்து தள்ளிக் கொண்டு செல்லும் அவல நிலை ஏற்பட்டது.