வேடசந்தூர் அருகே உள்ள அணைபட்டியில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட தடுப்பணை உள்ளது. கடந்த ஒரு மாதமாக மழை பெய்யாத நிலையில் அணைப்பட்டியில் உள்ள தடுப்பணையில் திடீரென தண்ணீர் நிரம்பி வழிந்து கடந்த நான்கு நாட்களாக சென்று கொண்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் விவசாயிகள் மழையே பெய்யாமல் எப்படி தண்ணீர் வருகிறது என வியப்படைந்தனர். திண்டுக்கல் மாநகராட்சியின் கழிவு நீர் திறந்து விடப்பட்டதாக விவசாயிகள் குற்றச்சாட்டு.