திண்டுக்கல் மேற்கு: ரெட்டியார்சத்திரம் அருகே பராமரிப்புக்காக கிணற்றில் இறங்கி தவித்த 2 பேரை மீட்ட தீயணைப்புத்துறையினர்
ரெட்டியார்சத்திரம் கோபிநாத சுவாமி கோவில் அருகே கன்னிவாடி ஓடை ரோடு என்ற பகுதியில் ஜாகிர்உசேன் என்பவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் பராமரிப்பு பணிக்காக கிணற்றுக்குள் இறங்கிய முத்துராம்பட்டியை சேர்ந்த சிவசுப்பிரமணி, சரவணகுமார் ஆகிய இருவரும் கிணற்றை விட்டு மேலே ஏறி வர முடியாமல் தவித்தனர். தகவல் அறிந்த திண்டுக்கல் தீயணைப்பு நிலைய வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி மீட்பு வலை மூலம் பத்திரமாக 2 பேரையும் மீட்டனர்