உலகப் பிரசித்தி பெற்றதும் ஆதி அத்தி வரதர் வீற்றிருக்கும் திருக்கோவிலுமான காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் இன்று ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டுச் சிறப்பு உற்சவம் நடைபெற்றது. இந்த உற்சவத்தில் மூலவர் வரதராஜப் பெருமாள் ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் மஞ்சள் நிறப் பட்டுடுத்தி பக்தர்களுக்கு காட்சியளித்தார். மேலும் வைர வைடூரியங்கள் மற்றும் பல வண்ண மலர்களால் செய்யப்பட்ட சிறப்பு அலங்காரங்கள் பெருமாளின் அழகை மேலும் மெருகூட்டின.