சத்தியமங்கலம்: புது வடவள்ளி பகுதியில் துவங்கிய 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம், நேரில் வந்து ஆய்வு செய்த ஆட்சியர்
ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் வட்டத்துக்கு உட்பட்ட புது வடவள்ளி பகுதியில் தனியார் பள்ளி வளாகத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் உயர் மருத்துவ சேவை முகாம் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி ஐஏஎஸ் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் அதை தொடர்ந்து பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்