நிலக்கோட்டை: 100 நாள் வேலைக்கு சென்று திரும்பிய பெண்கள் மீது ஆட்டோ மோதி பெண் பலி, 2 பேர் படுகாயம் வத்தலகுண்டுவில் சோகம்
பழைய வத்தலகுண்டு பிரிவு அருகே 100 நாள் வேலைக்கு சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்த பெண்கள் மீது அதிவேகமாக வந்த ஆட்டோ ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அவர்கள் மீது மோதியது இதில் பழைய வத்தலகுண்டுவை சேர்ந்த ரத்தினம் என்பவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் முத்துலட்சுமி, பிச்சையம்மாள் ஆகிய 2 பேர் படுகாயம் வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் விபத்தை ஏற்படுத்திய ஆட்டோ ஓட்டுனர் தப்பி ஓட்டம் வத்தலகுண்டு போலீசார் விசாரணை