சிங்கம்புனரி: அணைக்கரைபட்டியில் வீட்டின் கதவை திறந்து 25 சவரன் நகை திருட்டு-பட்டபகலில் நடந்த சம்பவத்தால் கிராம மக்கள் அதிர்ச்சி,போலீசார் விசாரணை
சிங்கம்புணரி அருகே அணைக்கரைப்பட்டியில் சரவணன்-சுமதி தம்பதியின் வீட்டை பூட்டி முன்பகுதியில் நின்ற இருசக்கர வாகனத்தில் வைத்து விட்டு சுமதி மாடு மேய்க்க வீட்டை பூட்டி விட்டு தோப்பிற்கு சென்றார்.இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை திறந்து பீரோவில் இருந்த 25 சவரன் நகைகளை திருடி தப்பினர்.மதியம் வீடு திரும்பிய சுமதி வீட்டை திறந்து பீரோவில் இருந்த நகைகள் திருடு போனது தெரிந்தது.உடனே இது குறித்து சிங்கம்புணரி காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரி்ல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.