நிலக்கோட்டை: ஒன்றிய அரசு தமிழக மக்களையும், விவசாயிகளையும் வஞ்சிக்கிறது திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் புதுப்பட்டியில் குற்றச்சாட்டு
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பேரூராட்சி புதுப்பட்டியில் ரூபாய் 10 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட உயர் கோபுர மின்விளக்கு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரும் நிகழ்வு நடைபெற்றது. இதில் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் பங்கேற்று உயர் கோபுர மின் விளக்கை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன், பேரூர் செயலாளர் ஜோசப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.