செந்துறை அருகே உள்ள மாமரத்துபட்டியை சேர்ந்தவர் தெய்வேந்திரன் (33). மரம் வெட்டும் தொழிலாளி. இவர் பெரியூர்பட்டி பகுதியில் உள்ள தோட்டத்தில் மரம் வெட்டும் பணியில் ஈடுபட்ட போது பெரிய மரத்துண்டு ஒன்றை வெட்டி எடுத்து, செல்லும் போது கால் தடுமாறி கீழே விழுந்ததில் மரத்துண்டு தலையில் விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். மேலும் நத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.