எட்டயபுரம்: மூ கோட்டூர் நான்கு வழிச்சாலையில் பைக் மீது கார் மோதி விபத்து ஒருவர் பலி
மானூர் பகுதியை சேர்ந்தவர் சந்தனமாரி. இவர் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே தெற்கு முத்துலாபுரத்தில் உள்ள மகாலெட்சுமி என்பவரை திருமணம் முடித்துள்ளார். கர்ப்பிணியான மகாலெட்சுமிக்கு சில தினங்களுக்கு முன்பு வளைகாப்பு நடைபெற்றுள்ளது. இதற்காக சந்தனமாரி மனைவி ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் தூத்துக்குடி - மதுரை நெடுஞ்சாலையில் மூ.கோட்டூர் விலக்கில் தனது பைக்கில் சாலையை கடக்க முயன்ற போது திருச்செந்தூரில் இருந்து புதுக்கோட்டை நோக்கி சென்ற கார் மோதி சந்தனமாரி உயிரிழந்தார்