ஓட்டப்பிடாரம்: முள்ளூர் முதல் சந்திரகிரி வரை உள்ள சாலை மோசமாக உள்ளதால் அப்பகுதி மக்கள் நாற்று நடும் போராட்டம் நடத்தினர்
ஒட்டப்பிடாரம் அருகே உள்ள முள்ளூர் முதல் சந்திரகிரி வரை உள்ள சாலை குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு ஏற்றநிலையில் இல்லை. இதற்கு காரணம் சந்திரகரியில் உள்ள கல்குவாரிக்கு அதிகளவில் செல்லும் கனரக வாகனங்கள் தான் காரணம் என்று கூறப்படுகிறது. எனவே, குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க கோரி அப்பகுதி மக்கள் சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.