காளையார்கோவில்: மறவமங்கலம் சேது டீக்கடை
அருகே பேருந்து செல்வதற்கு இடையூறாக நிறுத்தி இருந்த பைக்கை எடுக்கச் சொன்னது தொடர்பாக தகராறு- 5 பேர் மீது வழக்கு
சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரன் மறவமங்கலம் சேது டீக்கடை அருகே நின்று கொண்டிருந்தபோது அரசு பேருந்து செல்வதற்கு இடையூறாக நிறுத்தி இருந்த பைக்கை விக்கி என்ற விக்னேஷ் குமாரிடம் எடுக்கச் சொன்னது தொடர்பாக இரு தரப்பிற்கும் வாய் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் ஆபாசமாக பேசி தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது, இதுகுறித்து காளையார்கோவில் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.