திண்டுக்கல் மேற்கு: தேசிய அளவிலான பூப்பந்தாட்ட போட்டி நேற்று பி.எஸ்.என்.ஏ., பொறியியல் கல்லூரியில் துவங்கியது
தமிழ்நாடு பூப்பந்தாட்ட கழகம் மற்றும் திண்டுக்கல் பூப்பந்தாட்ட கழகம் சார்பில் 44-வது சப் ஜூனியர் மற்றும் 71-வது சீனியர் பிரிவுக்கான தேசிய அளவிலான பூப்பந்தாட்ட போட்டி நேற்று துவங்கியது. துவக்க விழா நிகழ்ச்சிக்கு, பி.எஸ்.என்.ஏ., கல்லூரி முதன்மை சேர்மன் ரகுராம் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் சரவணன் போட்டியை துவக்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார். தமிழ்நாடு பூப்பந்து விளையாட்டு வீரர் பரமசிவம் ஒலிம்பிக் தீபத்தை ஏந்தி வந்தார்.