ஆத்தூர்: அண்ணாமலையார் மில்மேடு அருகே நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர் கைது
Attur, Dindigul | Nov 20, 2025 திண்டுக்கல்லை அடுத்த அண்ணாமலையார் மில்மேடு அருகே சின்னாளப்பட்டி சேர்ந்த பெண் கடந்த 15-ம் தேதி நடந்து சென்ற போது கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை பறித்து சென்றது தொடர்பாக அம்பாத்துறை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சின்னாளப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் தனிப்படையினர் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட மதுரை, புதுரை சேர்ந்த அகமதுயாசின் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து நகையை மீட்டு சிறையில் அடைத்தனர்