கரூர் காவிரி ஆறு மாயனூர் அணையில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த ராட்சத குழாயில் குஜிலியம்பாறை அருகே உள்ள பாளையம் ஐயப்பன் கோவில் அருகில் வாழ்வு உடைந்ததால் தண்ணீர் பீச்சி அடித்து வெள்ளமாக சென்றது. பார்ப்பதற்கே கண்கொள்ளாக் காட்சியாக இருந்ததால் ஏராளமானோர் வேடிக்கை பார்த்துச் சென்றனர். இதன் காரணமாக திண்டுக்கல் மாவட்ட பகுதிகளுக்கு குடிநீர் வருவது சிக்கலாகி உள்ளது.