மானாமதுரை: ரூ.55.5 லட்சம் செலவில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணிக்கான பூமிபூஜை கட்டி குளம் பகுதியில் எம்பி பங்கேற்பு
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கட்டிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில், மாநிலங்களவை உறுப்பினர் ப.சிதம்பரத்தின் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.55.5 லட்சம் செலவில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணிக்கான பூமிபூஜை விழா இன்று நடைபெற்றது. சிவகங்கை லோக்சபா தொகுதி உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் விழாவில் பங்கேற்று கட்டுமான பணிகளை மணியளவில் தொடங்கி வைத்தார்.