விருத்தாசலம்: சாலை விரிவாக்க பணிகளுக்காக மாற்றுப் பாதை முறையாக அமைக்காததால் நெல் ஏற்றிச் சென்ற லாரி வண்ணாண்குடிகாடு அருகே சாலையில் கவிழ்ந்து விபத்து
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த வண்ணான்குடிகாடு கிராம பேருந்து நிலையம் எதிரே விருத்தாசலம்- ஜெயங்கொண்டம் சாலை விரிவாக்கம் பணி நடந்து வருகிறது.முறையான மாற்று பாதை அமைக்காததால் குணமங்கலம் கிராமத்தில் இருந்து விருத்தாசலம் நோக்கி நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலிருந்து நெல் மூட்டைகளை ஏற்றி வந்த லாரி திடீரென சாலையின் குறுக்கே கவிழ்ந்தது இதனால் விருத்தாசலம்- ஜெயங்கொண்டம் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பயணிகள் கடும் அவதி அடைந்தனர்