திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பேரூராட்சிக்கு உட்பட்ட தினசரி சந்தை செயல்பட்டு வருகிறது இப்பகுதியில் புதிதாக வணிக வளாகத்தில் சுமார் 75 கடைகள் கட்டப்பட்டன கட்டப்பட்ட கடைகள் அனைத்தும் ஏலம் விடப்படுவதாக கூறப்பட்ட நிலையில் பேரூராட்சி நிர்வாகத்தின் செயல் அலுவலர் மற்றும் திமுகவைச் சேர்ந்த பேரூராட்சி தலைவர் திமுக நகர செயலாளர் ஆகியோர் கடைகளை ஏலம் விடாமல் திமுகவினருக்கும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சரின் உறவினருக்கும் கடைகளை ஒதுக்கியதாக கூறி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.