சிவகங்கை: அரளிக்கோட்டையில் கோகுலாஷ்டமி கொண்டாட்டம் – 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் ராதை-கிருஷ்ணன் வேடமிட்டு அசத்தல்
சிவகங்கை அருகே அரளிக்கோட்டையில் கிராம மக்கள் இணைந்து கிருஷ்ண ஜெயந்தி (கோகுலாஷ்டமி) விழாவை உற்சாகமாகக் கொண்டாடினர். பகவான் கிருஷ்ணர் அவதரித்த நாளை கோகுலாஷ்டமி என அழைக்கின்றனர். உலக உயிர்களைக் காப்பதற்கும், தர்மத்தை நிலைநாட்டுவதற்கும் மகாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் ஒன்பதாவது அவதாரமாகக் கருதப்படும் கிருஷ்ணர், ஆவணி மாத தேய்பிறை அஷ்டமி திதி ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்ததாக புறாணங்கள் கூறுகின்றன.